Easy Tutorial
For Competitive Exams

GS - Indian National Movement (இந்திய தேசிய இயக்கம்) INM - ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்ககால எதிர்ப்புகள் Test Yourself

56032.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப்பகுதிகளை வெற்றி கொண்டதும் தங்களது எல்லையை விரிவுப்படுத்திக்கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன.
ii. வரலாற்றாசிரியர்கள் இதை முதல் இந்திய சுதந்திரப்போர் என்று குறிப்பிடுகிறார்கள்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி பலருடைய ஆட்சிப்பகுதிகளை வெற்றி கொண்டதும் தங்களது எல்லையை விரிவுப்படுத்திக்கொண்டே போனதும் தொடர்ச்சியான பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன. அவர்களால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மன்னர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள், தங்கள் ஆட்சிப்பகுதியிலிருந்து , பாளையக்காரர்கள் ஆகியோரால் இத்தகையை கிளர்ச்சிகள் ஏற்பட்டன. வரலாற்றாசிரியர்கள் இதைத் தொடக்க நிலை எதிர்ப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
56033.மைசூர் எந்தப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது?
விஜயநகர்
சோழர்
சாளுக்கியர்
ராஷ்டிரக்கூடர்
Explanation:

ஹைதர் அலியின் எழுச்சி: மைசூர், விஜயநகரப் பேரரசின் கீழ் நிலமானிய முறையில் இயங்கிய ஒரு சிறு அரசாக இருந்தது. 1565இல் விஜயநகரப் பேரரசு வீழ்ந்ததற்குப் பிறகு உடையார் வம்சத்தினர் சுதந்திரமான ஆட்சியாளர் ஆயினர்.
56034.உடையார் வம்சத்தினரின் தலைநகரம் மைசூரிலிருந்து எங்கு மாற்றப்பட்டது?
தஞ்சாவூர்
ஸ்ரீரங்கப்பட்டினம்
திண்டுக்கல்
கோயம்புத்தூர்
Explanation:

ராஜா உடையார் 1578இல் அரியணை ஏறினார். 1610இல் தலைநகரம் மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றப்பட்டது. அப்போதிருந்து உடையார் வம்சத்தினரின் ஆட்சி தொடர்ந்தது.
56035.கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக (பௌஜ்தார்) இருந்தவர்?
திப்பு சுல்தான்
பாமன்ஷா
ஹைதர் அலி
ஃபதே முகம்மது
Explanation:

ஹைதர் அலியின் தந்தை ஃபதே முகம்மது கோலார் பகுதியின் கோட்டைக் காவற்படைத் தளபதியாக (பௌஜ்தார்) இருந்தார். அவரது இறப்புக்குப் பின் ஹைதர் அலி தன் தலைமைப்பண்புகள் மூலம் படையின் உயர்பதவிகளை விரைவாக அடைந்தார்.
56036.ஃபதே ஹைதர் பகதூர்’ (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றவர்?
திப்பு சுல்தான்
பாமன்ஷா
ஹைதர் அலி
ஃபதே முகம்மது
Explanation:

1755க்குள் ஹைதர் அலி 100 குதிரைப்படை வீரர்களையும் 2000 காலாட்படை வீரர்களையும் நிர்வகிக்கும் அளவுக்கு அதிகாரம் படைத்த பொறுப்பைப் பெற்றிருந்தார். மைசூரில் இராணுவத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியை ஒடுக்கினார். மராத்தியர் ஆக்கிரமித்த மைசூர் அரசின் சில பகுதிகளை ஹைதர் மீட்டெடுத்தார். இதற்காக அவர் ‘ ஃபதே ஹைதர் பகதூர்’ (வீரமும் வெற்றியும் கொண்ட சிங்கம்) என்ற பட்டம் பெற்றார்.
56037.கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் யாருடைய காலத்தில் குறுநிலமன்னராக இருந்தார்?
கர்னல் பெய்லி
கர்னல் ஃபுல்லர்ட்டன்
கர்னல் லேங்
கர்னல் ஹெரான்
Explanation:

இவர் 1761இல் பிறந்தார். கட்டபொம்மன் நாயக்கர் என்பது அவரது குடும்பப் பட்டமாகும். கட்டபொம்மனின் தாத்தா ஜெகவீர கட்டபொம்மன் கர்னல் ஹெரான் காலத்தில் குறுநிலமன்னராக இருந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆம் வயதில் பாஞ்சாலங்குறிச்சி பாளையத்துக்குப் பொறுப்பேற்றார்.
56038.ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக யாருடன் கூட்டு சேர்ந்தார்?
டச்சுக்காரர்
டேனியர்கள்
பிரெஞ்சுக்காரர்
மராத்தியர்
Explanation:

1760இல் ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக புதுச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தார். ஆனால் அவர் தனது சொந்த மண்ணில் மராத்தியரால் உருவாக்கப்பட்ட சதித்திட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனினும் ஹைதர் அதை வெற்றிகரமாக முறியடித்தார். அதற்குப் பிறகு அவரே நடைமுறையில் மைசூரின் உண்மையான ஆட்சியாளர் ஆனார்.
56039.எந்த ஊர் திரும்பத் தரப்படும் என்ற வாக்குறுதி மூலமாகப் புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார்?
முதுமலை
களக்காடு
உடுமலை
சங்ககிரி
Explanation:

ஊற்றுமலை, சுரண்டை, தலைவன்கோட்டை, நடுவக்குறிச்சி, சிங்கம்பட்டி, ஊர்க்காடு, சேத்தூர், கொல்லம்கொண்டான், வடகரை ஆகிய பாளையங்களின் ஆட்சியாளர்களும் புலித்தேவரின் கூட்டமைப்பில் சேர்ந்தனர். திருவிதாங்கூருக்குக் களக்காடு திரும்பத் தரப்படும் என்ற வாக்குறுதி மூலமாகப் புலித்தேவர் திருவிதாங்கூரின் ஆட்சியாளரையும் தன் கூட்டமைப்பில் சேர்த்திருந்தார்.
56040.நீல் சிலை இந்தியாவில் எங்கு வைக்கப்பட்டிருந்தது?
மும்பை
கல்கத்தா
டெல்லி
சென்னை
Explanation:

சென்னை மௌன்ட் ரோட்டில் வைக்கப்பட்டிருந்த நீல் சிலை இந்திய தேசியவாதிகளைக் கோபம் கொள்ளச் செய்தது. அதை அப்புறப்படுத்த காங்கிரஸ் சத்தியாக்கிரகம் செய்தது. ராஜாஜியின் காங்கிரஸ் அமைச்சரவை (1937-39) இச்சிலையை அகற்றி சென்னை அருங்காட்சியகத்தில் வைத்தது.
56041.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின்போது பணியிலிருந்த இராணுவ அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக எதையும் கவனிக்கவில்லை என முதலில் கூறப்பட்டது.
ii. அன்றைக்குப் பொறுப்பிலிருந்த ஆங்கிலேய அதிகாரி தனக்குப் பதிலாக ஜமேதார் ஷேக் காசிம் என்ற இந்திய அதிகாரியை அனுப்பினார் என்று பின்னர் தெரிய வந்தது
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

வேலூர் கோட்டையில் 1806 ஜூலை 9ஆம் நாள் இரவின்போது பணியிலிருந்த இராணுவ அதிகாரிகள் வழக்கத்துக்கு மாறாக எதையும் கவனிக்கவில்லை என முதலில் கூறப்பட்டது. எனினும், அன்றைக்குப் பொறுப்பிலிருந்த ஆங்கிலேய அதிகாரி பார்வையிடும் தனது வேலையை அன்று செய்யவில்லை என்றும் தனக்குப் பதிலாக ஜமேதார் ஷேக் காசிம் என்ற இந்திய அதிகாரியை அனுப்பினார் என்றும் பின்னர் தெரிய வந்தது. வேலூர் புரட்சிக்குப் பிறகு, அவர் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார்.
56042.நாடுகளை சுற்றுவேலிக் கொள்கை மூலம் அனுமதித்தவர்?
டல்ஹவுசி
வாரன் ஹேஸ்டிங்ஸ்
வெல்லெஸ்லி
லிட்டன்
Explanation:

ஒரு குறிப்பிட்ட பகுதியில் அதிகாரத்துக்கு உட்பட்ட இடங்களைத் தக்கவைத்துக்கொள்ள இடைப்பட்ட நாடுகளை (buffer states) வாரன் ஹேஸ்டிங்ஸ் சுற்றுவேலிக் கொள்கை மூலம் தொடர்ந்து அனுமதித்தார். எனினும் கம்பெனி கர்நாடக அரசியல் விவகாரங்களினால் ஈர்க்கப்பட்டது. நவாப் பதவிக்காகத் தொடர்ச்சியாக நடைபெற்ற மோதல்களே இதற்குக் காரணம். ஆங்கிலேய வணிகர்கள் இதை இந்திய அரசியலில் நேரடியாகத் தலையிடுவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாகக் கருதினார்கள். ஆனால் அவர்களின் முயற்சிக்கு ஹைதர் அலி, ஹைதராபாத் நிஜாம் ஆகிய வலிமைமிக்க சக்திகளிடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன.
56043.எந்த ஆண்டு அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் என விக்டோரியா பிரகடனம் கூறியது?
1861
1864
1865
1867
Explanation:

1853ஆம் ஆண்டு சட்டமன்றம் ஐரோப்பியர்களை மட்டுமே உறுப்பினர்களாக கொண்டிருந்ததால் அவர்கள் இந்தியரின் கருத்துக்களைத் தெரிந்துகொள்ள அக்கறை இல்லாமல் இருந்ததே இச்சிக்கலுக்கு காரணம் என்று கூறிய அறிக்கை 1861இல் அமைக்கப்படும் சட்ட மன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர் எனக் கூறியது.
56044.முதலாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
1767 முதல் 1769 வரை
1768 முதல் 1772 வரை
1769 முதல் 1774 வரை
1775 முதல் 1782 வரை
Explanation:

முதலாம் மைசூர் போர் 1767-69: மூன்றாம் கர்நாடகப் போரில் வங்காளத்திலிருந்து படைகளை வழிநடத்திய கர்னல் ஃபோர்டே 1759இல் மசூலிப்பட்டிணத்தைக் கைப்பற்றினார். இது ஜாலாபத் ஜங் உடனான உடன்படிக்கைக்கு வழிவகுத்தது. அவர் ‘வட சர்க்கார்கள்’ என அறியப்படும் கஞ்சம், விசாகப்பட்டினம், கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய மாவட்டங்களை ஆங்கிலேயருக்கு விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது.
56045.வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் ஆனதை அங்கீகரிக்கும் உடன்படிக்கை எது?
அலகாபாத் உடன்படிக்கை
பூனா உடன்படிக்கை
நாக்பூர் உடன்படிக்கை
பேசின் உடன்படிக்கை
Explanation:

வட சர்க்கார்கள் ஆங்கிலேயர் வசம் ஆனதை முகலாயப் பேரரசர் 1765இல் அலகாபாத் உடன்படிக்கை மூலம் அங்கீகரித்தார். ஆனால் 1766இல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் கையகப்படுத்தியபோது பிரச்சனை தோன்றியது.
56046.வட சர்க்கார் பகுதிகளை ஆங்கிலேயர் கையகப்படுத்த யாருடன் உடன்படிக்கை செய்து கொண்டனர்?
நிஜாம் அலி
சௌகத் அலி
முகமது அலி
பகதூர்ஷா
Explanation:

வட சர்க்கார் பகுதிகளை ஆங்கிலேயர் கையகப்படுத்த நிஜாம் அலி எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக அவருக்கு எதிரிகளிடமிருந்து ஆபத்து வரும்போது ஆங்கிலேயர் உதவிக்கு வருவார்கள் என்றும் ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த வாக்குறுதி மூலம் ஹைதர் அலிக்கு எதிராக நிஜாம் அலிக்கு உதவத் தாங்கள் தயாராக இருப்பதை உணர்த்தினார்கள். ஆங்கிலேயர் பின்னாட்களில் பின்பற்றிய துணைப்படைத்திட்டத்துக்கு இந்நடைமுறை காரணியாக அமைந்தது.
56047.கூற்று (கூ): நிஜாம் அலி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டாலும், 1767இல் அவருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டது.
காரணம் (கா): எனவே ஆங்கிலேயர் ஹைதருக்கு எதிரான போரை அறிவித்தார்கள்.
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் ஆகும்.
கூற்று சரி; காரணம் தவறு
கூற்று மற்றும் காரணம் தவறானவை
கூற்று சரி; காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
Explanation:

நிஜாம் அலி ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டாலும், 1767இல் அவருக்கும் ஹைதர் அலிக்கும் இடையே ஓர் புரிந்துணர்வு உடன்பாடு ஏற்பட்டது. எனவே ஆங்கிலேயர் ஹைதருக்கு எதிரான போரை அறிவித்தார்கள். இது முதலாம் ஆங்கிலேய மைசூர் போர் அல்லது முதலாம் மைசூர் போர் என அறியப்படுகிறது.
56048.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. முதல் மைசூர் போரில் பம்பாயிலிருந்து வந்த ஆங்கிலேயரின் ஒரு படை மேற்குக்கடற்கரையின் மங்களூரையும் அதைச் சுற்றியிருந்த பிற பகுதிகளையும் கைப்பற்றியது.
ii. பெங்களூரைக் கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயரின் முயற்சி வெற்றி பெறவில்லை.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

முதல் மைசூர் போரில் பம்பாயிலிருந்து வந்த ஆங்கிலேயரின் ஒரு படை மேற்குக்கடற்கரையின் மங்களூரையும் அதைச் சுற்றியிருந்த பிற பகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் ஹைதர் இவற்றை மீட்டெடுத்தார். பெங்களூரைக் கைப்பற்ற நினைத்த ஆங்கிலேயரின் முயற்சி வெற்றி பெறவில்லை.
56049.கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு
i. 1768இல் ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து, கேப்டன் நிக்சனைத் தோற்கடித்துக் கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார்.
ii. ஹைதரின் தளபதி சாதத்துல்லா கான் மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை எந்த எதிர்ப்புமின்றி வழிநடத்திச் சென்றார்.
(i) சரி
(ii) சரி
(i) மற்றும் (ii) சரி
(i) மற்றும் (ii) தவறு
Explanation:

1768இல் ஹைதர் பாராமஹால் (சேலம் மாவட்டம்) மீது திடீர் தாக்குதல் தொடுத்து, கேப்டன் நிக்சனைத் தோற்கடித்துக் கரூரையும் ஈரோட்டையும் கைப்பற்றினார். இதற்கிடையே ஹைதரின் தளபதி ஃபசலுல்லா கான் மதுரையிலும் திருநெல்வேலியிலும் படையை எந்த எதிர்ப்புமின்றி வழிநடத்திச் சென்றார். ஹைதர் தஞ்சாவூருக்கும் அங்கிருந்து கடலூருக்கும் முன்னேறிச் சென்றார்.
56050.முதல் ஆங்கில மைசூர் போர் எந்த உடன்படிக்கை மூலம் முடிவுக்கு வந்தது?
புதுச்சேரி உடன்படிக்கை
ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கை
பாரிஸ் உடன்படிக்கை
சென்னை உடன்படிக்கை
Explanation:

ஆங்கிலேயர் மீதான தாக்குதலை நிறுத்த ஹைதர் விரும்பாவிட்டாலும், மராத்தியர் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சுறுத்தல் அவரை ஆங்கிலேயருடன் அமைதி உடன்படிக்கை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளியது. அவருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே சென்னை உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது.
56051.மருது பாண்டியர்கள் ______________________ இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்கள்?
கோபால நாயக்கர்
யாதுல் நாயக்கர்
a மற்றும் b)
சிவகிரி பாளையக்காரர்
Explanation:

கட்டபொம்மன் தனது பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற கொதிப்புடன்தான் இருந்தார். இந்தச் சூழலில் மருது பாண்டியர்கள் திண்டுக்கல் கோபால நாயக்கருடனும் ஆனைமலை யாதுல் நாயக்கருடனும் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான கூட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இருந்தார்கள். இதே விருப்பத்துடன் இருந்த கட்டபொம்மனும் மருது பாண்டியரும் நெருக்கமானார்கள்.
Share with Friends